tamilnadu

img

ராமர் பாலத்தைக் கட்டியது வேதகால என்ஜீனியர்கள்!

லக்னோ:
மும்பை ஐஐடியில் 57-வது பட்டமளிப்பு விழா, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதிநடைபெற்றது. இதில் மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ்போக்ரியால் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “அணு மற்றும் மூலக்கூறுகளை முதன்முதலில் ஆய்வு செய்தவர், இந்து வேதத்தில் குறிப்பிடப் படும் சக்ரா ரிஷிதான்” என்றுதெரிவித்தார். மேலும், “உலகின் முதல் அறுவை சிகிச்சைநிபுணரும் யார் என்றால், அவரும் வேத ரிஷிகளில் ஒருவரான சுஷ்ருதாதான்” என்றுபரபரப்பை ஏற்படுத்தினார். 

இதுதொடர்பான சர்ச்சைகளே இன்னும் ஓயாத நிலையில், தற்போது ஐஐடி காரக்பூரின் 65-ஆவது பட்டமளிப்புவிழாவிலும் பேசியிருக்கும் போக்ரியால், “வேதகாலத் தில் இருந்த இந்திய என்ஜீனியர்கள் கட்டியதுதான் ராமர் பாலம்” என்று தனதுவேலையைக் காட்டியுள்ளார். ராமர் பாலத்தைப் பற்றிபேசினாலே, ‘அதைக் கட்டியபொறியாளர்கள் யார், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியைச் சேர்ந்தவர்களா?’ எனசிலர் கிண்டலாக கேட்பதாகவும்; அவர்களுக்குத் தான் இந்த பதில் என்றும் கூறியுள்ளார்.சமஸ்கிருதம்தான் உலகின் முதல் மொழி; அதற்குமுன்பாக எந்த ஒரு மொழியும் இருந்ததாக யாராலும் நிரூபிக்க முடியாது; சமஸ் கிருதம் தெய்வமொழி, அறிவியல் பூர்வமான மொழி;முதல் புத்தகமே வேதம்தான்என்றெல்லாம் கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.மேலும், இஞ்ஜினியரிங் மாணவர்கள், ராமர் சேதுபாலம், பகவத் கீதை, ஆயுர் வேத மருத்துவம் மற்றும் சமஸ்கிருத மொழிகள் உள் ளிட்டவைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அதனுள் பொதிந்துள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும், குறிப்பாக, ராமர் சேது பாலம் போன்ற ஒன்றை வருங்காலத்தில் மனிதர் களால் மீண்டும் கட்ட இயலுமா? என்ற கேள்விக்கும் விடை காண முயல வேண்டும்என்று உளறிக் கொட்டியுள்ளார்.

;